கொரோனாவா? இன்றும் 11 பேருக்கு பரிசோதணை!! -பணிப்பாளர் சந்தியமூர்த்தி- - Yarl Thinakkural

கொரோனாவா? இன்றும் 11 பேருக்கு பரிசோதணை!! -பணிப்பாளர் சந்தியமூர்த்தி-

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இன்றும் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் ஆய்வுகூட பரிசோதணை மேற்கொள்ளப்பட்டது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியும் சங்கானை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 10 பேருக்கும் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எந்த ஒரு நோயாளிகளும் இனம் காணப்படவில்லை கடந்த சில நாட்களாக தொற்று உள்ளவர்கள் எவரும் இனம் கானப்படவில்லை என்றும் அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post