இந்தியாவில் சிக்கிய 101 இலங்கை மாணவர்கள்!! -இன்று நாடு திரும்புவார்கள்- - Yarl Thinakkural

இந்தியாவில் சிக்கிய 101 இலங்கை மாணவர்கள்!! -இன்று நாடு திரும்புவார்கள்-

கொரோனாவால் எழுந்துள்ள இடர் காலப்பகுதியில் இந்தியாவில் சிக்கியுள்ள 101 மாணவர்கள் இன்று வியாழக்கிழமை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அமர்தசரஸ் நகரிலிருந்து இன்று வியாழக்கிழமை வானுர்தி மூலம் அவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

இதனிடையே, இந்தியா, பாகிஸ்தான் நேபாளம் ஆகிய நாடுகளில் நிர்க்கதியாகியுள்ள 443 இலங்கையர்களை அழைத்து வருவதற்கான விசேட வான் போக்குவரத்துக்கள் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கன் வானுர்தி சேவை தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், நாளைய கோயம்புத்தூரில் இருந்து 117 இலங்கை மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளனர்.

இதேவேளை, நாளைய தினம் நேபாளம் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 93 மாணவர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட உள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
Previous Post Next Post