கொழும்பில் இருந்து 1000 பேர் வடக்கு வந்தனர்!! -தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைப்பு- - Yarl Thinakkural

கொழும்பில் இருந்து 1000 பேர் வடக்கு வந்தனர்!! -தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைப்பு-

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வடக்கு மாகாணத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களுக்காக அழைத்துவரப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் உள்ள பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 99 பேரும், கொடிகாமம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 350 பேரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கிளிநெச்சி மாவட்டத்தில் இரணைமடுவில் உள்ள நிலையத்திற்கு 172 பேரும், இயக்கச்சியில் உள்ள நிலையத்திற்கு 200 பேரும் அழைத்துவரப்பட்டுள்ளனர். முழங்காவில் கடற்படை முகாமிற்கு வந்தவர்களின் எண்ணிக்கை சரிவர தெரிவிக்கப்படவில்லை.

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு இராணுவ முகாமில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திதற்கு 160 பேர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல் வவுனியா மாவட்டத்தில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கும் கொழும்பில் இருந்து ஒரு தொகுதியினர் கொண்டுவரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post