10 மணித்தியாலங்கள் தளர்த்தப்படும் ஊடரங்கு!! -நாளை முதல் நடமுறையில்- - Yarl Thinakkural

10 மணித்தியாலங்கள் தளர்த்தப்படும் ஊடரங்கு!! -நாளை முதல் நடமுறையில்-

ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படும் நேர இடைவெளி 10 மணித்தியாலங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இருப்பினும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்காக ஊடரங்கு தளர்வு தொடர்பில் இதுவரை எந்த அறிவிப்பும் ஜனாதிபதி ஊடகப் பிரிவால் வெளியிடவில்லை.

தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மீள் அறிவித்தல்வரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 19 மாவட்டங்களில் நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணிக்கு அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டு பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீள அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் அறிவித்துள்ளது.
Previous Post Next Post