யாழின் 1ஆவது கொரோனா நோயாளி விரைவில் வீடு திரும்புவார்!! -உடல் நலம் பெறுகிறதாம்- - Yarl Thinakkural

யாழின் 1ஆவது கொரோனா நோயாளி விரைவில் வீடு திரும்புவார்!! -உடல் நலம் பெறுகிறதாம்-

யாழ்.மாவட்டத்தில் முதலாவது கொரோனா நோயாளியான தாவடிப் பகுதியைச் சேர்ந்தவருடைய உடல் நலம் தேறி வருவதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் அவர் பூரண குணமடைந்து வைத்திய சாலையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் பணிப்பாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கொரோனா நோயாளியாக அடையாளம் காணப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தொற்றுநோய் வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு தொடர்ந்து 15 நாட்களாக குறித்த வைத்திய சாலையில் சிகிச்சை பொற்றுவரும் அவருடைய உடல்நலம் தொடர்பில் இன்று கொழும்பு தொற்றுநோய் வைத்திய சாலையின் பணிப்பாளருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டிருந்தேன்.

இதன் போது அவருடைய உடல் தற்பேது தேறி வருகின்றது. இன்னும் சில நாட்களில் அல்லது கிழமைகளின் பின்னர் அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது என்று யாழ்.போதனா வைத்திய சாலைப் பணிப்பாளர் மேலும் தகவல் வெளியிட்டுள்ளார்.

Previous Post Next Post