யாழ் நகரில் கிருமி தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பம்!! - Yarl Thinakkural

யாழ் நகரில் கிருமி தொற்று நீக்கி விசிறும் பணி ஆரம்பம்!!

யாழ்.மாநகரப் பகுதியில் பொது மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களில் கிளிமித் தொற்று நீக்கி விசிறும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் எஸ்.சுதர்சன் தலைமையில் இந்த செயற்பாடு இன்று காலை 8 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்தப் பணி மாநகரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் முன்னேடுக்கப்படவுள்ளது.

விசேட அதிரடிப் படையினரின் கொழும்பிலிருந்து வருகை தந்த அணியினர், மாநகர பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், யாழ்ப்பாணம் பிரதேச செயலக கிராம சேவையாளர்கள் மற்றும் பொலிஸார் உள்ளிட்டோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post