வறிய குடும்பங்களுக்கு நாளை முதல் உலர் உணவு!! -யாழ்.அரச அதிபர் மகேசன்- - Yarl Thinakkural

வறிய குடும்பங்களுக்கு நாளை முதல் உலர் உணவு!! -யாழ்.அரச அதிபர் மகேசன்-

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வறுமைக்கோட்டுக்கு உள்பட்ட குடும்பங்களுக்கு நாளை புதன்கிழமை முதல் உலர் உணவுப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வரும் வருமானம் குறைந்த குடும்பங்களின் விவரம் அந்தந்த கிராம சேவகர் ஊடாக திரட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்பொழுது கோதுமை மா மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக இடர் முகாமைத்துவபிரிவிற்கு கிடைத்துள்ளது.

அதனால் நாளை காலை முதல் பிரதேச செயலர்கள் ஊடாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரால் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றார்.
Previous Post Next Post