கொரோனா நோயாளர்களை கண்டுபிடிக்க களத்தில் மேப்ப நாய்கள்!! - Yarl Thinakkural

கொரோனா நோயாளர்களை கண்டுபிடிக்க களத்தில் மேப்ப நாய்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றிற்கு உள்ளானவர்களை கண்யறியக் கூடியவாறு மோப்ப நாய்களை பயிற்சியில் ஈடுபடுத்துவது தொடர்பில் பிரித்தானியா ஆராய்ச்சி ஒன்றினை மேற்கொண்டு வருகின்றது.

பிரித்தானியாவில் சுகாதார மற்றும் மூலிகை மருத்துவ பாடசாலை மற்றும் டெர்ஹாம் பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோப்ப நாய்களுக்கு கொரோனா தொற்றாளர்களை கண்டறிய முடியுமா என்பது தொடர்பிலேயே இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருவதுடன் மோப்ப நாய்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மலேரியா நோயாளர்களை இனங்காண்பதற்கு இதற்கு முன்னர் மோப்ப நாய்களை ஈடுபடுத்துவதற்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Previous Post Next Post