ஊடரங்கு சட்டத்தை நீடிக்க ஜனாதிபதி உத்தரவு!! - Yarl Thinakkural

ஊடரங்கு சட்டத்தை நீடிக்க ஜனாதிபதி உத்தரவு!!

நாடு முழுவதும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதி செயலகம் உத்தியோக பூர்வமான அறிவிப்பினை விடுத்துள்ளது.

கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம், ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை நடைமுறைக்கு வந்த ஊரடங்கு நிலை வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய 22 மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 23ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டு பிற்பகல் 2 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும். இம்மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.

கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு சட்டம் மீளவும் பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாடுமுழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு நிலை முன்னர் நாளைமறுதினம் திங்கட்கிழமை காலை 6 மணிக்குத் தளர்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கொழும்பு, ஹம்பகா மற்றும் புத்தளம் ஆகிய மூன்று மாவட்டங்களில் தற்போது நடைமுறையிலுள்ள ஊரடங்கு எதிர்வரும் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணிவரை மேலும் 24 மணித்தியாலங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாட்டில் கோரோனா வைரஸ் தொற்று பரம்பலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கீழ் நாடுமுழுவதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
Previous Post Next Post