மலேரியாக்கான மருந்து விற்க தடை!! -மீறினால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை- - Yarl Thinakkural

மலேரியாக்கான மருந்து விற்க தடை!! -மீறினால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை-

மலேரியா நோய்க்கு பயன்படுத்தும் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்று தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தலை விடுத்துள்ளது.

அனைத்து சில்லறை விற்பனை மருந்தகங்களுக்கு, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தலை இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்தது.

அதன்படி, மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தும் க்ளோராக்வின் மற்றம் ஹைட்ராக்ஸி குளோரோக்வின் ஆகிய மருந்துகளை வைத்திய நிபுணர்களின் அனுமதி இன்றி வழங்க வேண்டாம் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த கட்டுப்பாட்டை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post