வடக்கில் மேலும் தனிமைப்படுத்தும் நிலயங்கள்!! -பலாலி, இரணைமடு, கேப்பாப்பிலவில் அமைப்பு- - Yarl Thinakkural

வடக்கில் மேலும் தனிமைப்படுத்தும் நிலயங்கள்!! -பலாலி, இரணைமடு, கேப்பாப்பிலவில் அமைப்பு-

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக தனிமைப்படுத்தல் நிலயங்களை அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பலாலியிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுவிலும் மற்றும் முல்லைத்தீவில் கேப்பாப்பிலவு பகுதிகளிலேயே குறித்த தனிமைப்படுத்தல் நிலயங்களை அமைக்கும் நடவடிக்கையினை விமானப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

இந்த தனிமைப்படுத்தல் நிலையங்கள் விமானப்படை முகாம்களிலேயே அமைக்கப்படவுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து வரு கிறவா்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க இது பயன்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.
மேலும் யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குரிய கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம் கொடிகாமம் 522ஆவது படை முகாமில் அமைக்கப்படவுள்ளது என்று மாவட்டச் செயலாளர் க.மகேசன்
பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார். அத்துடன், அதற்கு 5 மில்லியன் ரூபா நிதியும் கோரப்பட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Previous Post Next Post