வடக்கின் சகல வீதிகளையும் மூடிய இராணுவம்!! - Yarl Thinakkural

வடக்கின் சகல வீதிகளையும் மூடிய இராணுவம்!!

ஜனாதிபதி செயலகத்தின் அதிரடி உத்தரவுக்கு அமைய வடக்கு மாகாணத்திற்குள் நுழையும் அனைத்து வீதிகளும் இராணுவத்தால் மூடப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுடன் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், அரசாங்கம் வடமாகாண மக்கள் பிற மாவட்டங்களுக்கு செல்வதை அதிரடியாக தடுத்துள்ளது.

இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களில் வடக்கிலிருந்து எவரும் வெளியேற முடியாதவாறும், வடக்குக்குள் எவரும் நுழையாதவாறும் சகல பிரதான வீதிகளையும் இரா ணுவம் தற்காலிகமாக மூடியிருக்கின்றது.

மேலும் வடக்கின் 5 மாவட்டங்களின் எல்லைகளிலும் பிரதான வீதிகளை வழிமறித்து இராணுவத்தினர் சோதனை சாவடிகளை அமைத்துள்ளனர்.
Previous Post Next Post