யாழ் உணவகத்தில் பழுதான உணவுகள் மீட்பு!! -ஊரடங்கு தளரும் வேளை விற்பனைக்கு தயாரா வைக்கப்பட்டிருந்தாம்- - Yarl Thinakkural

யாழ் உணவகத்தில் பழுதான உணவுகள் மீட்பு!! -ஊரடங்கு தளரும் வேளை விற்பனைக்கு தயாரா வைக்கப்பட்டிருந்தாம்-

யாழ்.மாவட்டத்தில் அமுலில் உள்ள ஊரங்கு சட்டம் தளர்த்தப்படும் நேரத்தில் விற்பனை செய்வதற்கு தயாராக ஸ்ரான்லி வீதியில் உள்ள உணவகம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத உணவுப் பொருட்கள் ஒரு தொகையினை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் இன்று சனிக்கிழமை யாழ்.நகரில் உள்ள உணவகங்களுக்கு திடீர் விஜயம் செய்தனர்.

இதன் போது குறித்த உணவகத்தில் உள்ள குளிரூட்டியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேற்படி உணவுப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

பழைய ரொட்டி மற்றும் பழுதடைந்த நிலையில் உள்ள கோழி இறைச்சி மற்றும் பாவனைக்குதவாத மீன் மற்றும் வேறு பல உணவுப் பொருட்களே இதன் போது மீட்கப்பட்டுள்ளது. .

மீட்கப்பட்ட உணவு பொருட்கள் அழிக்கப்பட்டதோடு, இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களால் வழக்கும் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Previous Post Next Post