யாழில் வீட்டில் இருந்தே சகல பொருட்கள் வாங்கலாம்!! -டோர் டெலிவொரி செய்போர் விபரம் வெளியானது- - Yarl Thinakkural

யாழில் வீட்டில் இருந்தே சகல பொருட்கள் வாங்கலாம்!! -டோர் டெலிவொரி செய்போர் விபரம் வெளியானது-

யாழ்.மாவட்டத்தில் உலர் உணவுப் பொருள்கள் மற்றும் மருந்துகளை ஊரடங்கு நேரத்திலும் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் வியாபார நிலையங்கள் மற்றும் மருந்தகங்களின் விவரம் யாழ்.மாவட்ட செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், கொரோனா நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளவுமே டோர் டெலிவரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வியாபார நிலையங்களின் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு பொது மக்கள் தமக்கு தேவையான பொருட்களை ஓடர் செய்தால், அந்த வியாபார நிலையத்தினைச் சேர்ந்தவர்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று கொடுப்பார்கள்.

இதனால் பொது மக்கள் ஊடரங்கு தளர்த்தப்படும் வேளையில் முன்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கும் நிலை ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Previous Post Next Post