சுவிஸ் போதகரை சந்தித்தவர்களை கண்டுபிடிக்க அதிர நடவடிக்கை!! - Yarl Thinakkural

சுவிஸ் போதகரை சந்தித்தவர்களை கண்டுபிடிக்க அதிர நடவடிக்கை!!

சுவிஸ் போதகரை சந்தித்தவர்கள் இனங்கானப்படும் வரையில் வடக்கில் இருந்து வெளியேறுவதற்கு அனைவருக்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இன்று ஞர்யிற்றுக்கிழமை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே மேற்படி பயணத்தடை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 
வடக்கின் 5 வடமாவட்டங்களில் வாசிக்கும் மக்கள் தமது மாவட்டங்களில் இருந்து வெளியேறுவது தடை செய்யப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் அரியாலை கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெனியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகை தந்த தலைமை போதகரை சந்தித்த மற்றும் போதனையில் கலந்து கொண்ட அனைவரையும் இனங்காணும் வரையில் இந்த பயணத் தடை நீடிக்கப்படும்.

குறித்த 5 மாவட்டங்களில் வசிக்கும் மக்களை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கின் வசிக்கும் மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு வடக்கின் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்கம் பொதுமக்களிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

Previous Post Next Post