கொரோனா ஏற்படுத்தும் மனஉளைச்சல்!! -மக்களை எச்சரிக்கிறார் சத்தியமூர்த்தி- - Yarl Thinakkural

கொரோனா ஏற்படுத்தும் மனஉளைச்சல்!! -மக்களை எச்சரிக்கிறார் சத்தியமூர்த்தி-

கொரோனா ஏற்படுத்தும் மனஉளைச்சல் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி எச்சரிக்கை செய்துள்ளார்.

கொரோனா நோய் தொடர்பில் ஒரு நாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் குறித்த நோய் தொடர்பான தகவல்களுக்காக நம்பிக்கையான வலைதளங்களை பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

மனஉளைச்சல் பசி, தூக்கம் என்பவற்றை பாதிக்கின்றது. உளநலஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது. தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மனஉளைச்சலுக்குள்ளாகி தம்நோயெதிர்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளை பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மனஉளைச்சலுக்குள்ளாக்கி நோயெதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளை பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆகவே தேவையற்ற செய்திகளையும், வீடியோக்களையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒருசில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தகவல் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post