கொரோனாவா? யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒருவர் அனுமதி!! -கனகராயன்குளம் முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டார்- - Yarl Thinakkural

கொரோனாவா? யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒருவர் அனுமதி!! -கனகராயன்குளம் முகாமிலிருந்து கொண்டுவரப்பட்டார்-

கனகராயன்குளப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்தில் வைத்து கண்காணிக்கப்பட்டுவந்த நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்.

மாத்தரை பகுதியினைச் சேர்ந்த குறித்த நபர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில், கட்டநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானப்படையின் பாதுகாப்பில் கனகராயன்குளப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தும் நிலையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்.

அங்கு கண்காணிப்பில் இருந்த அவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக கொரோனா மருத்துவ பரிசோதணைகளை செய்வதற்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்திய சாலையில் கொரோனா தடுப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவ பரிசோதணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Previous Post Next Post