ஊடரங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை தேடிச் சென்று சந்தித்த அங்கஜன்!! -பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதி- - Yarl Thinakkural

ஊடரங்கால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை தேடிச் சென்று சந்தித்த அங்கஜன்!! -பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக உறுதி-

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் பகுதி விவசாயிகளை முன்னாள் அமைச்சர் அங்கஜன் இராமநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

மேலும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் அவர் விவசாயிகள் மத்தியில் உறுதியளித்துள்ளார்.

ஊடரங்கு சட்டம் தொடர்ந்து யாழ்.மாவட்டத்தில் அமுலில் உள்ள நிலையில் பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக விவசாயிகள் அங்கஜன் இராமநாதனிடம் முறையிட்டிருந்தனர்.

இதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த விவசாயிகளை அவர்கள் விவசாயம் செய்யும் இடங்களுக்கே சென்று அங்கஜன் இராமநாதன் சந்தித்து அவர்களின் குறை நிறைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன் போது, விவசாய மருந்துகள், உரங்கள், கால்நடை மருந்து பொருட்கள், தீவனங்கள் போன்றவற்றை தொடர்ச்சியான  ஊரடங்கினால் மூடியுள்ள விவசாய உள்ளீட்டு கடைகளில் பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

விவசாய உள்ளீட்டு பொருட்களை அந்தந்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாய சம்மேளனங்களினூடாக நடமாடும் சேவையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளூர் விவசாயப் பொருட்களை உள்ளூர் வியாபாரிகள் சேகரிக்கவும் சந்தைப்படுத்தவும் மற்றும் தம்புள்ளை, கொழும்பு போன்ற வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் லொறிகளுக்கும், சாரதிக்கும் உதவியாளருக்கும் விசேட பொறிமுறையூடாக அனுமதி எடுத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்க அதிபரின் ஊடாக  இராணுவ மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடித் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

நாளாந்த வருமானம் ஈட்டும் விவசாய தொழிலாளர்களில் பலர் சமுர்த்தி பயனாளிகள் ஆகையால் அவர்களுக்கு உலர் உணவு பொதி மற்றும் நிவராண முற்பண உதவிகள் நாளை முதல் பிரதேச செயலகம் மூலம் கிடைப்பதற்கு வழிவகை செய்வதாகவும் அங்கஜன் இராமநாதன் விவசாயிகள் மத்தியில் உறுதி அளித்தார்.
Previous Post Next Post