கொரோனாவால் இணைந்த சிகரங்கள்!! - Yarl Thinakkural

கொரோனாவால் இணைந்த சிகரங்கள்!!

கவிப்பேரரசு வைரமுத்து கொரோனா வைரஸ் குறித்த பாடல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த பாடலை பாடி இசை அமைத்து வெளியிட்டுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம்.

கொரோனா பாடலை எழுதியுள்ள வைரமுத்து அதில் பல வார்த்தை புகுத்தியுள்ளார். அணுவை விட சிறியது, அணுகுண்டை போல் கொடியது என அவரின் ஒப்பீடு எவ்வளவு உண்மை.

கொரோனா சத்தமில்லாமல் நுழைந்து, போரே போடாத நிலையிலும் உலகை நிலைகுலையச் செய்துள்ளது.

தொடுதல் வேண்டாம், தனிமையில் இருங்கள், தூய்மையாய் இருங்கள், கொஞ்சம் அச்சமும் இருக்கட்டும், அதை பற்றிய தெளிவும் இருக்கட்டும் என எழுதியுள்ளார் வைரமுத்து. இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
Previous Post Next Post