ஊடரங்கு தளர்வின் போது மதுபான சாலைகளை மூட அரசு அறிவிப்பு!! - Yarl Thinakkural

ஊடரங்கு தளர்வின் போது மதுபான சாலைகளை மூட அரசு அறிவிப்பு!!

நாட்டு மக்களின் நன்மை கருதி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் காலப்பகுதியில் மதுபான நிலையங்களை மூடுமாறு அரசாங்கம் அதிரடி அறிவிப்பினை விடுத்துள்ளது.

தற்போது நாட்டில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் தொடர்பலில் ஜனாபதிபதி செலயலகம் இன்று சனிக்கிழமை மாலை வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடரங்கு சட்டம் நேற்று மாலை 6 மணிமுதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றதை பல இடங்களிலும் அவதானிக்க கூடியதாக இருந்தது.

இதே போன்று மதுபான சாலைகளிலும் பெருமளவானர்கள் திரண்டு நின்ற புகைப்படங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.

இந்நிலையல் ஊரடங்கு சட்டம் தொடர்பலில் இப்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மதுபான சாலைகளை மூடுமாறு அரசு அதிரடியாக அறிவிப்பினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post