அனலைதீவில் கொரோனா நோயாளியா? -ரஸ்யாவிலிருந்து வந்தவர் முற்றுகைக்குள்- - Yarl Thinakkural

அனலைதீவில் கொரோனா நோயாளியா? -ரஸ்யாவிலிருந்து வந்தவர் முற்றுகைக்குள்-

யாழ்.தீவகனம் அனலைதீவுப் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் நபர் ஒருவர் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனலதீவு பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் ரஸ்ய நாட்டிற்கு சென்று வந்த நிலையிலேயே அவர் சுகாதார துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட நபரை யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனது.

இதற்காக காங்கேசன்துறை கடற்படையினருடைய உதவி கோரப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த உதவி கோரப்பட்டு 3 மணித்தியாலங்கள் கடந்துவிட்ட நிலையிலும், கடற்படையினர் அங்கு இதுவரை செல்லவில்லை.

இதனால் குறித்த நபர் சுகாதார துறையினருடைய கண்காணிப்பில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு வைத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post