யாழில் நேற்று அனுமதியான இருவருக்கும் கொரோனா இல்லை!! -மருத்துவ பரிசோதணை உறுதி செய்தது- - Yarl Thinakkural

யாழில் நேற்று அனுமதியான இருவருக்கும் கொரோனா இல்லை!! -மருத்துவ பரிசோதணை உறுதி செய்தது-

கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ்.போதனா வைத்திய சாலையில் நேற்று அனுமதிக்கப்பட்ட இரவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று வைத்திய பரிசோரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை கிளிநொச்சி மற்றும் சுன்னாகம் பகுதியில் இருந்து இருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் உள்ள கொரோனா சிகிச்சை விடுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இருவருடைய இரத்த மாதிரிகளும், கேரிக்கப்பட்டு அனுராதபுரத்தில் உள்ள வைத்தி கூடத்திற்கு பரிசோதணைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

அங்கிருந்து வந்த பரிசோதணை முடிவுகளில் குறித்த இருவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.


Previous Post Next Post