கொரோனா அச்சம்: குடும்பஸ்தர் தற்கொலை!! -குடும்பத்தை காக்க விபரீத முடிவு- - Yarl Thinakkural

கொரோனா அச்சம்: குடும்பஸ்தர் தற்கொலை!! -குடும்பத்தை காக்க விபரீத முடிவு-

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நபர் தனக்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்திலும், தனது நோய் குடுபத்துக்கு பரவிவிடும் என்ற அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பென்ட்வால் பகுதியை சேர்ந்தவர் சதாசிவ செட்டி (வயது 56) இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

குறித்த நபர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலை செய்வதால் அங்கு வருபவரிடமிருந்து தனக்கு கொரோனா வைரஸ் பரவி இருக்குமோ என சந்தேகப் பட்டுள்ளார்.

இருப்பினும் வைரஸ் தொடர்பான எந்த பரிசோதனைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை. தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் தெரிவிக்காமல் அவர் மன அழுத்தத்திலேயே இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் கொரோனா அச்சம் காரணமாக தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
Previous Post Next Post