செம்மணி தேவாலயத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா!! -போதனையில் பங்கு கொண்டவர்களுக்கும் ஆபத்தா- - Yarl Thinakkural

செம்மணி தேவாலயத்திற்கு வந்த சுவிஸ் போதகருக்கு கொரோனா!! -போதனையில் பங்கு கொண்டவர்களுக்கும் ஆபத்தா-

யாழ்.செம்மணி- இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்த்தவ தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டில் இருந்து வந்து போதனை செய்த மதபோதகர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
குறித்த மத போதகர் உயிருக்கு போராடிவரும் நிலையில் அவருடைய போதனையுடனான, ஆராதனைக்குச் சென்ற யாழ் வாசிகளுக்கும் கொரோனா தொற்று உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. 
குறித்த மதபோதகர் இலங்கைக்கு வரும்போது எந்தவிதமான தனிமைப்படுத்தல் சோதனைக்கும் உட்படவில்லை. இந்நிலையில் அவர் நடாத்திய மதபோதனை நிகழ்வில் கலந்து கொண்ட மக்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. 
ஆனாலும் இது தொடா்பாக எவரும் கண்கொள்வதாக இல்லை. இந்த தகவல் பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.எனவே தயவு செய்து அவ் வழிபாட்டில் கலந்து கொண்டவர்கள் யாராக இருப்பினும் 
உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல வேண்டும். தனிமை படுத்தபட வேண்டும். அவர்கள் அனைவரையும் இனங்கண்டு மக்களும் அவர்களிடமிருந்து விலகி நடக்கவும் என கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Previous Post Next Post