ஊடரங்கின் போது விவசாயிகளுக்கு விசேட சலுகை!! - Yarl Thinakkural

ஊடரங்கின் போது விவசாயிகளுக்கு விசேட சலுகை!!

விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாவட்டங்களில் விவசாய சமூகத்திற்கு தங்களது பணிகளை தடையின்றி மேற்கொள்வதற்கு இடமளிக்குமாறு அரசு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருள்கள் மற்றும் ஏனைய பொருள்கள் போதுமானளவு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதால் தேவையற்ற வகையில் பொருள்களை சேர்ப்பதில் குழப்பமடைய தேவையில்லை என அரசு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை கொண்டுசெல்வதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே அத்தியாவசிய உணவுப்பொருள்களை தடையின்றி தேவையான இடங்களுக்கு கொண்டுசெல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றுள்ளது.

Previous Post Next Post