கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு- - Yarl Thinakkural

கொரோனா மிக வேகமாக பரவும்!! -இலங்கை மக்களை எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு-

கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு இலங்கை மக்களை எச்சரிக்ளை செய்துள்ளது.

குறிப்பாக இலங்கையில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் கொரோனா வைரஸ் தொற்றானது வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி தகவலை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எனவே குறித்த வைரஸ் பரவலை தடுப்பதற்கான கடுமையான சில நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டுமெனவும் குறித்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இடைக்கிடையே தளர்த்தப்படும் ஊரடங்கு உத்தரவு நடவடிக்கைகளை உடன் நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு யோசனைகளையும் இதன்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளது.
Previous Post Next Post