நீர்கொழும்பு வாசி முன்பே அரச ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்தால் உயிர் தப்பியிருப்பார்!! -சுகாதார அமைச்சர்- - Yarl Thinakkural

நீர்கொழும்பு வாசி முன்பே அரச ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்தால் உயிர் தப்பியிருப்பார்!! -சுகாதார அமைச்சர்-

கொரோன வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நீர் கொழும்வு வாசி காலதாமதமின்றி அரச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அவரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய் கிழமை கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

அவருக்கு சுவாசக் கோளாறு எனத் தெரிவித்து நேற்றுமுன்தினம் தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மறுநாளான நேற்றைய தினமே நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அவருக்கு கோரோனா வைரஸ் தொற்று இருப்பதாகத் தெரிவிக்கப்படாத நிலையில் பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

காலதாமதமின்றி நேரடியாக அவரை அரச வைத்தியசாலையில் சேர்த்திருந்தால் உரிய பரிசோதனைகள் ஊடாக அவரைப் பாதுகாத்திருக்க முடியும் என்றார்.
Previous Post Next Post