தாவடி கொரோனா நோயாளியுடன் வங்கி பணியாளருக்கு தொடர்பு!! -மூடப்பட்டது கைதடி இலங்கை வங்கி- - Yarl Thinakkural

தாவடி கொரோனா நோயாளியுடன் வங்கி பணியாளருக்கு தொடர்பு!! -மூடப்பட்டது கைதடி இலங்கை வங்கி-

கைதடியில் உள்ள இலங்கை வங்கியில் கொரோனா நோயாளியுடன் தொடர்பிலிருந்த பெண் ஒருவர் அங்கு கடமையாற்றிய காரணத்தினால் குறித்த வங்கி இன்று செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அங்கு கடமையாற்றியவர்களையும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டில் இருந்து வந்த பாதிரியாருடன் தொடர்பில் இருந்த தாவடிப் பகுதியை சேர்ந்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர் வசித்து வந்த தாவடி பகுதி முற்றுகையிடப்பட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் வீடுகளிலேயே கட்டாய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையல் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பெண் கைதடியில் உள்ள இலங்கை வங்கியின் பணியாளராக உள்ளார்.

இந்நிலையில் குறித்த வங்கி பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் அச்சம் ஏற்படும் என்ற சந்தேகத்தில் வங்கி 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. அங்கு கடமையாற்றியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post