இத்தாலியில் கொரோனா தாண்டவம்!! -ஒரு நாளில் 683 பேர் பலி- - Yarl Thinakkural

இத்தாலியில் கொரோனா தாண்டவம்!! -ஒரு நாளில் 683 பேர் பலி-

இத்தாலியில் கொரோனா வைரஸ் நோய்யால் 683 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கையுடன் இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் மொத்த தொகை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

சீனாவின் ஹ_பேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 196 நாடுகளில் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக இத்தாலியை இந்த வைரஸ் புரட்டி எடுத்து வருகிறது.

இத்தாலியில் இதுவரை 74 ஆயிரத்து 386 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனாவுக்கு அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 683 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 503 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post