65 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு!! - Yarl Thinakkural

65 ஆக உயர்ந்தது கொரோனா பாதிப்பு!!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் இன்று வெள்ளிக்கிழமை  அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 65ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண்ணுடன் 66பேர்) அதிகரித்துள்ளது.

நாட்டில் கோரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் 218 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்படுகின்றனர்.

அத்துடன், மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட 14 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2 ஆயிரத்து 300 பேர்வரை தங்கவைத்து கண்காணிக்கப்படுகின்றனர்.
Previous Post Next Post