இத்தாலியை உலுப்பும் கொரோனா!! -ஒரே நாளில் 627 பேர் பலி- - Yarl Thinakkural

இத்தாலியை உலுப்பும் கொரோனா!! -ஒரே நாளில் 627 பேர் பலி-

இத்தாலியில் கட்டுப்படுத்த முடியாத வகையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 627 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது,  ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா உள்பட உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரசுக்கு சீனாவை விட இத்தாலியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தாலியில் இதுவரை இல்லாத வகையில் நேற்று மட்டும் கொரோனாவுக்கு 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 4032 ஆக உயர்ந்துள்ளது.
47 ஆயிரத்து 21 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5986 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Previous Post Next Post