ஊரடங்கு சட்டத்தை மதிக்காத 62 பேர் கைது!! - Yarl Thinakkural

ஊரடங்கு சட்டத்தை மதிக்காத 62 பேர் கைது!!

ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல் திரிந்த 62 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியில் இருந்து பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுலுக்கு வந்தது.

இருப்பினும் குறித்த சட்டத்தை மதிக்காமல் வெளியில் தேவையற்ற விதத்தில் சுற்றி திரிந்தவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நேற்று இரவு முதல் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி இன்று சனிக்கிழமை காலைவரை 10 கைது செய்யப்பட்டிருந்தனர். தொடர்ந்து பொலிஸ் நடத்திய ரோந்து நடவடிகையின் போது ஏரளமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறிப்பாக சற்று முன்னர்வரையில் 62 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
Previous Post Next Post