வடக்கில் வெள்ளியன்று 6 மணிநேரம் ஊடரங்கு தளர்வு!! -ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு- - Yarl Thinakkural

வடக்கில் வெள்ளியன்று 6 மணிநேரம் ஊடரங்கு தளர்வு!! -ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு-

வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்கள் மற்றும் புத்தளம் மாவட்டத்தில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 6 மணித்தியாலங்கள் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் நணபகல் 12 மணிக்கு மீள நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களான அபாய வலயத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய 16 மாவட்டங்களில் நாளைக் காலை 6 மணிக்குத் தளர்த்தப்படும் ஊரடங்கு நண்பகல் 12 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post Next Post