வடக்கின் 5 மாவட்டங்களிலும் ஊரடங்கை நீடிக்க அறிவிப்பு!! -ஜனாதிபதி செயலகம் விடுத்தது- - Yarl Thinakkural

வடக்கின் 5 மாவட்டங்களிலும் ஊரடங்கை நீடிக்க அறிவிப்பு!! -ஜனாதிபதி செயலகம் விடுத்தது-

யாழ்ப்பாணத்தில் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டதை அடுத்து வடக்கு மாகாணத்தில் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களிலும் அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் மார்ச் மாதம் 24ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாத்திபதியின் ஊடக பிரிவு இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்படி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு நீக்கப்படும் ஊடரங்கு சட்டம் மதியம் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post