யாழில் 380 குடும்பங்கள் படையினரின் முற்றுகைக்குள்!! -கொரோனா பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை- - Yarl Thinakkural

யாழில் 380 குடும்பங்கள் படையினரின் முற்றுகைக்குள்!! -கொரோனா பரவலை தடுக்க அதிரடி நடவடிக்கை-

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நடமாடிய பகுதியில் உள்ள 380 குடும்பங்கள் பாதுகாப்பு தரப்பினர்களால் முற்றுகையிடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் சற்று முன் நடந்த நடந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.

சுவிஸ் போதகர் நடமாடிய அரியாலை பகுதியில் 80 குடும்பங்களும், தாவடியில் கொரோனா நோயாளி வசித்த வீட்டினைச் சுற்றியுள்ள 300 குடும்பங்களும் இராணுவம் மற்றும் பொலிஸாருடைய பாதுகாப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Previous Post Next Post