ஊரடங்கு மீறல்: யாழில் 30 பேரை வாகனங்களுடன் கொண்டு சென்ற பொலிஸ்!! - Yarl Thinakkural

ஊரடங்கு மீறல்: யாழில் 30 பேரை வாகனங்களுடன் கொண்டு சென்ற பொலிஸ்!!

யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காமல் வீதிகளில் அனாவசியமாக நடமாடித்திரிந்த குற்றச்சாட்டில் 30 பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதுடன் அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்.நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை நடத்திய விசேட ரோந்து நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மதியத்திற்கு பிற்பட்ட காலப்பகுதியில் ஊடரங்கு உத்தரவினை மீறியும், பொலிஸாருடைய தாள்மையான அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல் வீதிகளில் தேவையற்ற விதத்தில் நடமாடித் திரிபவர்களை கைது செய்வதற்காக சிறப்பு நோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் வாகனங்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஐகதான அனைவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று யாழ்.பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post