வீட்டில் இருந்து பணிபுரியும் காலம்!! -எப்ரல் 3 வரை நீடிப்பு- - Yarl Thinakkural

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம்!! -எப்ரல் 3 வரை நீடிப்பு-

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இன்று முதல் ஏப்ரல் 3 ஆம் திகதி வரையான காலப்பகுதியையும் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கான காலமாக அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தவிர்ந்த ஏனைய அனைத்து அரச, அரை அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இதன் கீழ் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதி அரசாங்க விடுமுறையாக கருதப்படாததுடன் பொது மக்களின் சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

எனினும் மக்கள் ஒன்று கூடுவதை தடுத்து சுய தனிமைப்படுத்தலுக்கு வழிவகுத்தல் இதன் நோக்கமாகும்

இதற்கு முன்னர் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வீட்டில் இருந்து பணிபுரியும் காலமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post