கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்திற்கு சீல்!! -வீட்டிற்கு கொண்டு செல்ல தடை, 24 மணிநேரத்தில் எரிக்கவும் உத்தரவு- - Yarl Thinakkural

கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்திற்கு சீல்!! -வீட்டிற்கு கொண்டு செல்ல தடை, 24 மணிநேரத்தில் எரிக்கவும் உத்தரவு-

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிளந்தவர்களின் சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையிலேயே மேற்படி அறிவித்தலை விடுத்துள்ளது.

இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய முதலாவது நோயாளி இன்றிரவு உயிரிழந்தார். இந்த நிலையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவரின் சடத்தை அடக்கம் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இறப்பு விசாரணை அவசியமில்லை, மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டும் வைத்தியசாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் பூதவுடலை காண்பிக்க முடியும், சடலத்தை உடகூற்று பரிசோதை, சடலம் பழுதடையாது மருந்தேற்றல் என்பவை செய்யப்படலாகாது என்பதுடன், சடலம் வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது.

சடலம் பொதியிடப்பட்டு முத்திரையிடப்பட (சீல்) வேண்டும், முத்திரையிடப்பட்ட சடலம் எக்காரணம் கொண்டு மீளத் திறக்கப்படலாகாது, முத்திரையிடப்பட்ட சடலம் 24 மணிநேரத்தில் எரிக்கப்படவேண்டும் போன்ற நிபந்தனைகள் அந்த சுற்றறிக்கையில் விதிக்கப்பட்டுள்ளன.
Previous Post Next Post