24 மணிநேர கொரோனா கணக்கெடுப்பு!! -புதிதாக ஒருவர் கூட இனங்காணப்படவில்லை- - Yarl Thinakkural

24 மணிநேர கொரோனா கணக்கெடுப்பு!! -புதிதாக ஒருவர் கூட இனங்காணப்படவில்லை-

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று புதன்கிழமை மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா தொற்று க்குள்ளான ஒருவர் கூட இனங்காணப்படவில்லை.

இலங்கையில் நேற்று மாலை வரையில் 102 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். அவர்களில் சீன பெண் உள்ளிட்ட 3 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 99 பேர் சிகிச்சை பெற்றுவருவதுடன், 255 பேர் கண்கா ணிப்பில் உள்ளனர்.
Previous Post Next Post