பிற்பகல் 2 மணி வரை ஊடரங்கு தளர்தப்படும்!! - Yarl Thinakkural

பிற்பகல் 2 மணி வரை ஊடரங்கு தளர்தப்படும்!!

யாழ்ப்பாணம் கொழும்பு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தற்போது தளத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேற்படி தகவலை சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.

பொது மக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் எனவும் குறித்த காலப்பகுதியில் தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணி முதல் மீண்டும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவிருந்தது.

எனினும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமை, குழப்பம் ஏற்படும் வகையில் செயற்பட்டமை என்பற்றை கருத்தில் கொண்டு இந்த நேரடி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post