இலங்கையில் 1வது கொரோனா மரணம்!! -சிலாபம் பகுதியை சேர்ந்தவர் சாவு- - Yarl Thinakkural

இலங்கையில் 1வது கொரோனா மரணம்!! -சிலாபம் பகுதியை சேர்ந்தவர் சாவு-

கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு கொழும்பு அங்கொடையில் அமைந்துள்ள IDH வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் சற்று முன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 60 வயதுடைய சிலாபம் மாரவில பகுதியை சேர்ந்தவர் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உயிரிழந்த முதலாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், உயிரிழந்தவர் சில வருடங்களுக்கு முன்னர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு பிரிதொருவரின் சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் என்பதோடு, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சீனப்பெண் ஒருவர் உள்ளிட்ட 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 101 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Previous Post Next Post