வடக்கு மக்களுக்காக 1.6 மில்லியன்!! -சங்கக்கார, மஹேல வழங்கினர்- - Yarl Thinakkural

வடக்கு மக்களுக்காக 1.6 மில்லியன்!! -சங்கக்கார, மஹேல வழங்கினர்-

இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண மக்களுக்காக 1.6 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கியுள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார பத்தரமுல்லையிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் உப காரியாலத்தில் வைத்து குறித்த நிதியினை கையளித்துள்ளார்.

தானும் தான்னுடன் சேர்ந்து மஹேல ஜயவர்தன, சாலிய ஒஸ்ட்டின், நாதன் சிவகாமநாதன் மற்றும் எமது நண்பர்கள் சிலர் இணைந்து இந்த நிதியை திரட்டி கொடுத்ததாக சங்கக்கார ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post