ஒரு நாளில் 15,000 பேருக்கு கொரோனா!! -முதலிடத்தில் அமெரிக்கா- - Yarl Thinakkural

ஒரு நாளில் 15,000 பேருக்கு கொரோனா!! -முதலிடத்தில் அமெரிக்கா-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் மிக வேகமாக பாரவி வரும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தை பிடித்துள்ளடது. ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்தே அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 5 இலட்சத்து 29 ஆயிரத்து 614 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 23 ஆயிரத்து 976 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 3 இலட்சத்து 82 ஆயிரத்து 258 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 976 பேர் சிகிச்சையின் பின் வீடு சென்றுள்ளனர்.

கொரோனா வைரஸ் சீனா, ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து தற்போது அமெரிக்காவில் நிலை கொண்டுள்ளது. அந்நாட்டில் வைரஸ் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 15 ஆயிரத்து 461 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 672 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 209 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post