ஊடரங்கு நேரத்தில் துணிகர கஞ்சா கடத்தல்!! -117 கிலோவுடன் வடமராட்சி கடலில் வசமாக மாட்டினார்- - Yarl Thinakkural

ஊடரங்கு நேரத்தில் துணிகர கஞ்சா கடத்தல்!! -117 கிலோவுடன் வடமராட்சி கடலில் வசமாக மாட்டினார்-

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியூடாக யாழ்ப்பாணத்திற்குள் கடத்திவர முற்பட்ட 114 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்உட்பட்ட வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பளை புலானாய்வு பொலீசாருக்கு கிடைத்த தகவுலுக்கமைய குறித்த கஞ்சாகைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தகவல் தெரிவித்துள்ளனர்.

வடமராட்சி கிழக்க வத்திராயன் கடற்பகுதியில் படகு மூலம் இந்தியாவில் கஞ்சா கொண்டு வருவதாக பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் படகில் இருந்த கஞ்சாவினை தரைக்கு இறக்கிக் கொண்டிருந்தவரை சுற்றி வளைத்துள்ளனர்.
சுற்றிவளைத்த பொலிஸார் 114 கிலோ கிராம் கஞ்சாவினை மீட்துடன், அதை கடத்திவந்தவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகு, அதன் இயந்திரம் என்பவற்றையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
Previous Post Next Post