கொரோனா அச்சம்!! -யாழ்.சிறையில் இருந்து 110 கைதிகள் விடுதலை- - Yarl Thinakkural

கொரோனா அச்சம்!! -யாழ்.சிறையில் இருந்து 110 கைதிகள் விடுதலை-

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக யாழ்பாணம் சிறைச்சாலையில் இருந்து கடந்த சில தினங்களில் மட்டும் 110 கைதிகள் பிணையில் வெளியில் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இன்று திங்கட்கிழமையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு தொகுதியினர் பிணையில் விடுவிக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை விடுதலை செய்து சிறையில் உள்ள நெருக்கடியை குறைப்பதற்கு சிறைச்சாலை திணைக்களம் ஜனாதிபதி ஊடாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கடந்த சில தினங்களில் மட்டும் 110 சிறு குற்றங்கள் செய்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாளை திங்கட்கிழமையும் மேலும் ஒரு தொகுதி கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர் என்று சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous Post Next Post