11 நாளாக ஊடரங்கு!! -7,98 பேர் கைது: 702 வாகனங்கள் பறிமுதல்- - Yarl Thinakkural

11 நாளாக ஊடரங்கு!! -7,98 பேர் கைது: 702 வாகனங்கள் பறிமுதல்-

நாட்டில் கடந்த 11 நாட்களாக அமுலில் உள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் அலைந்து திரிந்த 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டதுடுன், 702 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நாடு முழுவதும் 11 தினங்களாக  ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 19 மாவட்டங்களில் மட்டும் இரண்டு நாள்களுக்கு ஒரு தடவை தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது.

இந்த நிலையில் ஊரடங்குச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் பொலிஸாரும் இராணுவத்தினரும் வீதிக் காவல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஊரடங்குச் சட்டத்தை மீறினர் என்ற குற்றச்சாட்டில் கடந்த 11 நாள்களில் 7 ஆயிரத்து 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், ஆயிரத்து 702 வாகனங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post