யாழ் ஜந்துசந்தி, நாவாந்துறை பகுதி லொக்டவுன்!! -10ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன- - Yarl Thinakkural

யாழ் ஜந்துசந்தி, நாவாந்துறை பகுதி லொக்டவுன்!! -10ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டன-

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேற்று உயிரிழந்த நீர்கொழும்பு வாசியுடன் தொடர்பில் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 10 குடும்பங்களுக்கு அதிகமானவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

ஜந்து சந்தி மற்றும் நாவந்துறைப் பகுதிகளில் உள்ள 10 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் குறித்த இரு பகுதிகளையும் முற்றுகையிட்ட சுகாதாரத்துறை, இராணுவம் மற்றும் பொலிஸார் முதற்கட்டமாக அங்குள்ள 10 குடும்பங்களை இனங்கண்டு அவர்களை தனிமைப்படுத்தியுள்ளனர்.
Previous Post Next Post