10 மாத குழந்தைக்கு கொரோனா!! -தீவிர சிகிச்சை கொடுக்கும் வைத்தியர்கள்- - Yarl Thinakkural

10 மாத குழந்தைக்கு கொரோனா!! -தீவிர சிகிச்சை கொடுக்கும் வைத்தியர்கள்-

கர்நாடகா மாநிலத்தில் 10 மாத பச்சிளம் குழந்தைக்கு உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் தக்சினா கன்னடா மாவட்டம் பென்ட்வால் தாலுகா சஜ்பநாடு கிராமத்தை சேர்ந்த தம்பதியினரின் குழந்தைக்கே கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை கடந்த 23 ஆம் திகதி அன்று காய்ச்சலால், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளால் மிகுந்த அவதியுற்று வந்தது. இதனால் பெற்றோர் அந்த குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு குழந்தையின் எச்சில் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் பிறந்து 10 மாதங்களே நிரம்பிய அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் பரவி பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனால், குழந்தை உடனடியாக கொரோனா பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. தற்போது குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, 10 மாத குழந்தைக்கு யார் மூலம் வைரஸ் பரவியது என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தையின் சொந்த ஊரான சஜ்பநாடு கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கிராமத்துக்குள் யாரும் நுழையவும், அங்கிருந்து வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post