கொரோனா அச்சம்; கைதிகள் இடமாற்றம்!! -10 அரசியல் கைதிகள் சற்று முன் யாழ் சிறைக்கு வந்தனர்- - Yarl Thinakkural

கொரோனா அச்சம்; கைதிகள் இடமாற்றம்!! -10 அரசியல் கைதிகள் சற்று முன் யாழ் சிறைக்கு வந்தனர்-

அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து 10 தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டது. அண்மையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் கரோனா வைரஸ் தொற்று  ஏற்பட்டது என்ற வதந்தி காரணமாக சிறைச்சாலை வளாகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 2 கைதிகள் சுட்டுக் கொல்லப் பட்டிருந்தனர்.

இந்த அசாதாரண சூழ்நிலையை அடுத்து தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பாதுகாபுக்காக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

அதனடிப்படையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 10 அரசியல் கைதிகள் முதற்கட்டமாக இன்று இரவு யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post