1 வயது குழந்தை யாழ்.போதனா வைத்திய சாலையில்!! -சுவிஸ் போதகருடன் தொடர்பாம்- - Yarl Thinakkural

1 வயது குழந்தை யாழ்.போதனா வைத்திய சாலையில்!! -சுவிஸ் போதகருடன் தொடர்பாம்-

சுவிஸ் நாட்டு மத போதகருடன் பழகியவருடைய ஒரு வயது குழந்தை மகன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.செம்மணி பிலதெல்பிய தேவாலயத்தின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்ததுடன், சுவி ஸ் நாட்டிலிருந்து வந்த பாதிாியாருடன் நெருக்கமாக பழகியவருடைய 1 வயது மகன் கொரோ னா சந்தேகத்தின் பெயாில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சுவிஸ் நாட்டிலிருந்து வந்த மதபோதகா் கொரோனா தொற்றுக்குள்ளானதுடன், அவருடன் பழகிய யாழ்ப்பாணத்தை சோ்ந்த மற்றொருவா் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாா். இந்நிலை யில் அாியாலை நாயன்மாா் கட்டு பகுதியை சோ்ந்த ஒருவரும் குறித்த பாதியாருடன் பழகிய

நிலையில் அவருடைய 1 வயது மகன் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம். என்ற சந்தே கத்தின் பெயாில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
Previous Post Next Post